உத்தரப் பிரதேசத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) சூழல் அமைப்பை வலுப்படுத்த லக்னோவைச் சேர்ந்த IndiaAI மற்றும் உத்தரப் பிரதேச மேம்பாட்டு அமைப்புகள் கார்ப்பரேஷன் லிமிடெட் (UPDESCO) ஆகியவை ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
இந்த முன்னெடுப்பினைச் செயல்படுத்துவதற்கான மாநில முதன்மை முகமை UPDESCO ஆகும்.
உத்தரப் பிரதேசம் முழுவதும் 65 தரவு மற்றும் AI ஆய்வகங்கள் அமைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளன என்பதோடுலக்னோ மற்றும் கோரக்பூரில் இரண்டு ஆய்வகங்களும், பிலிபிட்டில் ஒரு தொழில்துறைப் பங்குதாரரின் ஒரு ஆய்வகமும் செயலில் உள்ளன.
இந்த ஆய்வகங்கள் AI-தயார் நிலையிலான கணினி வளங்கள், மென்பொருள், தரவுத் தொகுப்புகள் மற்றும் கற்றல் தொகுதிகளைக் கொண்டிருக்கும்.
மாணவர்கள் இதன் மூலம் நேரடிப் பயிற்சி, திட்ட அடிப்படையிலான கற்றல் மற்றும் AI திறன் மேம்பாட்டைப் பெறுவார்கள்.
இந்தத் திட்டம் AI திறன் இடைவெளியைக் குறைத்து AI கண்டுபிடிப்பு மற்றும் டிஜிட்டல் உள்ளடக்கத்தை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.