TNPSC Thervupettagam

AI-செயல்படுத்தப்பட்ட தொலைதூர மின்ணனு வாக்களிப்பு அமைப்பு

February 22 , 2026 12 hrs 0 min 35 0
  • புது தில்லியில் நடைபெற்ற இந்தியா AI தாக்க உச்சி மாநாட்டில் பீகார் ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) - செயல்படுத்தப்பட்ட தொலைதூர மின்ணனு வாக்களிப்பு முறையை அறிமுகப்படுத்தியது.
  • இந்த அமைப்பை பீகார் மாநில தேர்தல் ஆணையத்துடன் இணைந்து மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம் (C-DAC) உருவாக்கியது.
  • e-Voting SECBHR” என்ற திறன்பேசி செயலி, ஆண்ட்ராய்டு திறன்பேசிகள் மூலம் தொலைதூர வாக்களிப்பை செயல்படுத்துகிறது.
  • வாக்காளர் சரிபார்ப்பில் ஒற்றைக் கடவுச்சொல் (OTP) அங்கீகாரம், செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான முக அங்கீகாரம் மற்றும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை (EPIC) தரவுத் தளத்துடன் பொருத்துதல் ஆகியவை அடங்கும்.
  • பாதுகாப்பு அம்சங்களில் இரட்டை மறைகுறியாக்கம், உயிர் நிலை கண்டறிதல், தொடர் சங்கிலி அடிப்படையிலான சேமிப்பு மற்றும் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய காகித தணிக்கை சோதனை (VVPAT) ஆகியவை அடங்கும்.
  • இந்த முறை முதன்முதலில் 2025 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் பயன்படுத்தப் பட்டது என்பதோடு எதிர்கால சட்டமன்றத் தேர்தல்களுக்கும் இது பரிசீலிக்கப் படலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்