இந்திய அரசாங்கத்தின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் அஜய் குமார் சூட், இந்தியாவிற்கான AI 2030 முன்னெடுப்பின் கீழ் அறிக்கை வெளியீடுகளை வெளியிட்டார்.
அவற்றுள்,
Future Farming in India: AI Playbook for Agriculture,
Transforming Small Businesses: An AI Playbook for India’s Small and Medium Enterprises, and
Shaping the AI Sandbox Ecosystem for the Intelligent Age: White Paper ஆகியவை அடங்கும்.
விவசாயிகள் மற்றும் சிறு வணிகங்களுக்கான செயற்கை நுண்ணறிவு தீர்வுகளைப் பயன்படுத்துவதற்கான செயல்பாட்டு உத்திகளை இந்தச் செயல்பாட்டு வழிகாட்டிப் புத்தகங்கள் வழங்குகின்றன.
IMPACT AI கட்டமைப்பு ஆனது, அரசாங்கக் கொள்கைகளை செயல்படுத்துதல், தொழில் துறைத் தீர்வுகளை உருவாக்குதல் மற்றும் முன்னணி துறைத் தொழிலாளர்கள் கருவிகளை உருவாக்குதல் போன்ற ஒத்துழைப்பை வழிநடத்துகிறது.