ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகத்தின் நீர், சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார நிறுவனம் (UNU-INWEH) ஆனது "Environmental Cost of AI's Energy Use: Carbon, Water and Land Footprints" என்ற அறிக்கையை வெளியிட்டது.
உலகளாவிய தரவு மையங்களானது 2025 ஆம் ஆண்டில் சுமார் 448 டெராவாட் மணிநேர (TWh) மின்சாரத்தை நுகர்ந்துள்ளன, இது 2030-ஆம் ஆண்டிற்குள் 945 TWh-ஐ எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தரவு-மையச் செயல்பாடுகளுக்கு குளிர்வித்தல் மற்றும் மின்சார உற்பத்திக்காக 2030-ஆம் ஆண்டிற்குள், ஆண்டுக்கு 9.3 டிரில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படலாம்.
செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான மின்சார உள்கட்டமைப்பு 2030 ஆம் ஆண்டிற்குள் 14,500 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான நிலப்பரப்பை ஆக்கிரமிக்கக் கூடும்.
AI-இன் மொத்த ஆற்றல் நுகர்வில் 80–90% பயனர் வினவல்களுக்காக AI மாதிரிகளை இயக்கும் அனுமான செயல்முறைக்கே செலவாகிறது.
AI உள்கட்டமைப்பு மூலம் 2030 ஆம் ஆண்டிற்குள், ஆண்டுக்கு 2.5 மில்லியன் டன் மின்னணு கழிவுகள் உருவாகலாம்.
உலகளாவிய AI கம்ப்யூட்டிங் திறனில் 90%-க்கும் அதிகமானது அமெரிக்கா மற்றும் சீனாவில் குவிந்துள்ளதுடன் இது வளர்ந்து வரும் டிஜிட்டல் பிளவை எடுத்துக் காட்டுகிறது.