AI விநியோகச் சங்கிலிகள் குறித்த சான் பிரான்சிஸ்கோ பிரகடனம்
November 18 , 2026 2 days 68 0
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் நிலையான செழிப்பின் பாதுகாப்பான அடித்தளங்கள் குறித்த சான் பிரான்சிஸ்கோ பிரகடனத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் உட்பட பத்து நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.
சர்வதேச ஒத்துழைப்பின் மூலம் செயற்கை நுண்ணறிவு (AI) விநியோகச் சங்கிலிகளைப் பாதுகாப்பதை இப்பிரகடனம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, இஸ்ரேல், ஜப்பான், தென் கொரியா, கத்தார், சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஐக்கியப் பேரரசு ஆகியவை கையெழுத்திட்ட பத்து நாடுகளாகும்.
குறைக்கடத்திகள், முக்கியமான கனிமங்கள், எரிசக்தி உள்கட்டமைப்பு மற்றும் மேம்பட்ட உற்பத்தி உள்ளிட்ட முக்கியத் தொழில்நுட்பங்கள் மற்றும் விநியோகச் சங்கிலிகளை இது அடையாளம் காட்டுகிறது.
புத்தாக்கக் கொள்கைகள், அதீத நுண்ணறிவு (SI), விநியோகச் சங்கிலி ஒத்துழைப்பு, பாதுகாப்பு மற்றும் மீள்தன்மை ஆகியவற்றை உள்ளடக்கிய ஐந்து பணிக்குழுக்களை இது முன்மொழிகிறது.
பாக்ஸ் சிலிக்கா (Pax Silica) என்பது குறைக்கடத்தி உற்பத்தி மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பத் தொழில்களுக்குத் தேவையான சிலிக்கான் மற்றும் பிற கனிமங்களின் விநியோகத்தைப் பாதுகாப்பதற்காக 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தொடங்கப்பட்ட அமெரிக்கா தலைமையிலான முன்னெடுப்பாகும்.