TNPSC Thervupettagam
May 26 , 2026 5 days 89 0
  • இஸ்ரோவின் சந்திரயான்-3 விண்கலமானது, வாஷிங்டன் டி.சி-யில் உள்ள அமெரிக்க வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிறுவனத்திடமிருந்து (AIAA) 2026-ஆம் ஆண்டிற்கான 'கோடார்ட் விண்வெளிப் பயண விருதை' பெற்றுள்ளது.
  • சந்திரயான்-3 விண்கலமானது 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 அன்று நிலவின் தென் துருவத்திற்கு அருகில் உலகின் முதல் மென்மையான தரையிறக்கத்தை சாதித்தது.
  • இந்த விண்கலம் இதற்கு முன்பு மேற்பரப்பு மட்டத்தில் ஆய்வு செய்யப்படாத, அறிவியல் பூர்வமாக முக்கியத்துவம் வாய்ந்த நிலவின் பகுதியை ஆய்வு செய்தது.
  • சந்திரயான்-3 நிலவின் தென் துருவப் பகுதியில் உள்ள மண்ணில் முக்கியமான வேதித் தனிமங்கள் இருப்பதை உறுதிப்படுத்தியது, இது எதிர்கால திட்டங்களுக்கான உள்ளூர் வளங்களின் சாத்தியக்கூறுகளைக் குறிக்கிறது.
  • இந்த விண்கலம் நிலவில் எதிர்கால மனிதப் பயணங்கள் மற்றும் நீண்ட கால ஆய்வுகளுக்கு ஆதரவளிப்பதற்கான முக்கியமான அறிவியல் தரவுகளை வழங்கி உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்