AIBA-வின் ஒலிம்பிக் அங்கீகாரம் மீதான தற்காலிகத் தடை
June 28 , 2019 2224 days 738 0
சர்வதேச ஒலிம்பிக் குழு, AIBA-ன் (சர்வதேச குத்துச் சண்டைக் கூட்டமைப்பு - International Boxing Association) ஒலிம்பிக் அங்கீகாரத்திற்குத் தற்காலிகத் தடை விதிக்க முடிவு செய்துள்ளது.
மேலும், 2020 ஆம் ஆண்டின் டோக்கியோ விளையாட்டுகளுக்கான தகுதிப் போட்டி மற்றும் இறுதிப் போட்டித் தொடர்களை நடத்தும் பொறுப்பினை இக்குழு ஏற்றுக் கொண்டுள்ளது.
AIBA என்பது தொழில்சாரா குத்துச் சண்டைப் போட்டிகள் (ஒலிம்பிக் போன்ற), விருதுகள், உலக மற்றும் துணைநிலை சாம்பியன்ஷிப்களை அங்கீகரிக்கும் ஒரு விளையாட்டு அமைப்பாகும்.
சுவிட்சர்லாந்தின் லவ்சானியைத் தலைமையிடமாகக் கொண்ட இந்த அமைப்பு 1946 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.