TNPSC Thervupettagam

AIBD நிர்வாகக் குழுவின் புதியத் தலைமை

August 26 , 2025 9 days 59 0
  • தாய்லாந்தின் ஃபூகெட்டில் நடைபெற்ற 23வது பொது மாநாட்டில், ஆசிய-பசிபிக் ஒளிபரப்பு மேம்பாட்டு நிறுவனத்தின் (AIBD) நிர்வாகக் குழுவின் தலைமைப் பொறுப்பிற்கு இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டது.
  • 2016 ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்தியா இந்தத் தலைமைப் பொறுப்பினை மீண்டும் ஏற்றுள்ளது.
  • AIBD என்பது ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் (UNESCO) கீழ் 1977 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஒரு பிராந்திய அரசுகளுக்கிடையேயான அமைப்பாகும்.
  • இது பல கண்டங்களில் உள்ள அரசு மற்றும் துணை உறுப்பினர்கள் உட்பட 45 நாடுகளைச் சேர்ந்த 92 க்கும் மேற்பட்ட உறுப்பினர் அமைப்புகளைக் கொண்டுள்ளது.
  • பிரச்சார் பாரதி தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தை பிரதிநிதித்துவப் படுத்தச் செய்வதுடன், இந்தியா AIBD அமைப்பின் நிறுவன உறுப்பினராகவும் உள்ளது.
  • இந்த மாநாடு "Media for People, Peace and Prosperity" என்ற கருத்துருவின் கீழ் ஊடக ஒத்துழைப்பில் கவனம் செலுத்தியது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்