தாய்லாந்தின் ஃபூகெட்டில் நடைபெற்ற 23வது பொது மாநாட்டில், ஆசிய-பசிபிக் ஒளிபரப்பு மேம்பாட்டு நிறுவனத்தின் (AIBD) நிர்வாகக் குழுவின் தலைமைப் பொறுப்பிற்கு இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டது.
2016 ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்தியா இந்தத் தலைமைப் பொறுப்பினை மீண்டும் ஏற்றுள்ளது.
AIBD என்பது ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் (UNESCO) கீழ் 1977 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஒரு பிராந்திய அரசுகளுக்கிடையேயான அமைப்பாகும்.
இது பல கண்டங்களில் உள்ள அரசு மற்றும் துணை உறுப்பினர்கள் உட்பட 45 நாடுகளைச் சேர்ந்த 92 க்கும் மேற்பட்ட உறுப்பினர் அமைப்புகளைக் கொண்டுள்ளது.
பிரச்சார் பாரதி தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தை பிரதிநிதித்துவப் படுத்தச் செய்வதுடன், இந்தியா AIBD அமைப்பின் நிறுவன உறுப்பினராகவும் உள்ளது.
இந்த மாநாடு "Media for People, Peace and Prosperity" என்ற கருத்துருவின் கீழ் ஊடக ஒத்துழைப்பில் கவனம் செலுத்தியது.