புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசியப் புள்ளி விவர அலுவலகம் ஆனது 2026 ஆம் ஆண்டு ஜூலை முதல் 2027 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை வேளாண் குடும்பங்களின் அகில இந்தியக் கடன் மற்றும் முதலீட்டுக் கணக்கெடுப்பு (AIDIS) மற்றும் சூழ்நிலை மதிப்பீட்டுக் கணக்கெடுப்பு (SAS) ஆகியவற்றை நடத்த உள்ளது.
AIDIS என்பது 1951-52 ஆம் ஆண்டில் அகில இந்திய கிராமப்புறக் கடன் கணக்கெடுப்பாக முதன்முதலில் நடத்தப்பட்ட ஒரு முக்கிய குடும்ப/வீட்டு நிதிக் கணக்கெடுப்பாகும்.
இது 1961-62 ஆம் ஆண்டில் கடன் மற்றும் முதலீடு ஆகிய இரண்டையும் உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்பட்டது.
இந்தக் கணக்கெடுப்பு ஆனது கிராமப்புற மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் வீட்டுக் கடன் மற்றும் சொத்து உரிமை பற்றியத் தரவுகளை வழங்குகிறது மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி, புள்ளி விவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் மற்றும் பிற நிறுவனங்களின் கொள்கைகளை தெரிவிக்கிறது.
2003 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட வேளாண் குடும்பங்களின் சூழ்நிலை மதிப்பீட்டு ஆய்வு (SAS) ஆனது நாடு முழுவதும் வேளாண் சமூகங்களின் பொருளாதார நிலைமைகளை மதிப்பிடுவதற்காக 2013 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் விரிவுபடுத்தப் பட்டது.
இது வீட்டு வருமானம், செலவினம், கடன், நில உரிமை, பயிர் உற்பத்தி, வேளாண் நடைமுறைகள் மற்றும் அரசாங்கத் திட்டங்கள் மற்றும் பயிர்க் காப்பீட்டிற்கான அணுகலை உள்ளடக்கியது.