TNPSC Thervupettagam
April 4 , 2021 1503 days 830 0
  • நிதி ஆயோக்கின் அடல் புத்தாக்கத் திட்டமானது (AIM – Atal Innovation Mission) AIM – PRIME (Program for Researchers on Innovations, Market - Readiness & Intrepreneurship) திட்டத்தை தொடங்கியுள்ளது.
  • இத்திட்டம் இந்தியா முழுவதுமுள்ள அறிவியல் சார்ந்த உள்ளார்ந்த தொழில்நுட்பத்  தொடக்க மற்றும் துணிகர நிறுவனங்களை மேம்படுத்தி அவற்றுக்கு ஆதரவு அளித்தலை நோக்கமாகக் கொண்டதாகும்.
  • இந்த வகையில், இத்திட்டத்தை நாடு முழுவதும் தொடங்குவதற்காக Bill & Melinda Gates அறக்கட்டளையுடன் அடல் புத்தாக்கத் திட்டம் கை கோர்த்துள்ளது.
  • அது Venture – Centre எனும் இலாப நோக்கமில்லாத தொழில்நுட்ப வர்த்தகத் தொடக்க நிறுவனங்களைப் பாதுகாக்கும் அமைப்பினால் அமல்படுத்தப்படும்.
  • இத்திட்டத்தின் முதல் தொகுதியில் வலுவான அறிவியல் சார்ந்த உள்ளார்ந்த தொழில்நுட்ப வர்த்தகச் சிந்தனைகளை கொண்டுள்ள தொழில்நுட்ப மேம்பாட்டாளர்களுக்கு (ஆரம்பக் கட்டத்திலுள்ள உள்ளார்ந்த தொழில்நுட்ப தொடக்க நிறுவனங்கள் மற்றும் அறிவியலாளர்கள் / பொறியாளர்கள் / மருத்துவர்கள்) வாய்ப்பு வழங்கப் படும்.
  • 12 மாதங்களுக்குப் பயிற்சி மற்றும் உதவி வழங்குதல் ஆகியவற்றின் மூலம் குறிப்பிட்ட பிரச்சினைகளைத் தீர்ப்பதையே  இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்