நிதி ஆயோக்கின் அடல் புத்தாக்கத் திட்டமானது (AIM - Atal Innovation Mission) AIM iCREST என்ற ஒன்றைத் தொடங்கியுள்ளது.
இந்தத் திட்டத்திற்காக AIM ஆனது பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் நிறுவனம் & வத்வா நிறுவனத்துடன் இணைந்துள்ளது.
இது உயர் செயல்திறன் கொண்ட புத்தாக்க நிறுவனங்களை உருவாக்குவதின் மீது கவனம் செலுத்தும் வலுவான சூழலியலுக்கான ஒரு புத்தாக்க நிறுவங்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டமாகும்.
இது நாடு முழுவதும் புத்தாக்கச் சூழலியலில் விரிவான (முழுமையான) செயல்பாடுகளை ஏற்படுத்தி அவற்றை ஊக்கப்படுத்துவதற்காக இந்தியாவில் தொடங்கப் பட்ட இதே வகையைச் சேர்ந்த ஒரு முதலாவது முன்னெடுப்பாகும்.