நிதி ஆயோக் அமைப்பானது AIM-PRIME Playbook என்ற ஒன்றை வெளியிட்டுள்ளது.
அடல் புத்தாக்கத் திட்டம் என்பது இந்திய நாட்டில் புதுமை மற்றும் தொழில் முனைவோர் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கான இந்திய அரசின் முதன்மையான முன்னெடுப்பாகும்.
PRIME என்பது புத்தாக்கம், சந்தைத் தயார்நிலை மற்றும் தொழில்முனைவு ஆகியவற்றில் ஆராய்ச்சியாளர்களுக்கான திட்டம் என்பதாகும்.
ப்ளேபுக் என்பது ஆரம்ப-நிலை அறிவியல் அடிப்படையிலான, உள்ளார்ந்த தொழில் நுட்ப யோசனைகளை 12 மாத காலப் பயிற்சி மற்றும் வழிகாட்டுதலின் மூலம் கலப்பு கற்றல் பாடத்திட்டத்தைப் பயன்படுத்தி அதனை சந்தைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.