நிதி ஆயோக்கின் அடல் புத்தாக்கத் திட்டமானது (AIM – Atal Innovation Mission) AIM – PRIME (Program for Researchers on Innovations, Market -Readiness & Intrepreneurship) திட்டத்தை தொடங்கியுள்ளது.
இத்திட்டம் இந்தியா முழுவதுமுள்ள அறிவியல் சார்ந்த உள்ளார்ந்த தொழில்நுட்பத் தொடக்க மற்றும் துணிகர நிறுவனங்களை மேம்படுத்தி அவற்றுக்கு ஆதரவு அளித்தலை நோக்கமாகக் கொண்டதாகும்.
இந்த வகையில், இத்திட்டத்தை நாடு முழுவதும் தொடங்குவதற்காக Bill & Melinda Gates அறக்கட்டளையுடன் அடல் புத்தாக்கத் திட்டம் கை கோர்த்துள்ளது.
அது Venture – Centre எனும் இலாப நோக்கமில்லாத தொழில்நுட்ப வர்த்தகத் தொடக்க நிறுவனங்களைப் பாதுகாக்கும் அமைப்பினால் அமல்படுத்தப்படும்.
இத்திட்டத்தின் முதல் தொகுதியில் வலுவான அறிவியல் சார்ந்த உள்ளார்ந்த தொழில்நுட்ப வர்த்தகச் சிந்தனைகளை கொண்டுள்ள தொழில்நுட்ப மேம்பாட்டாளர்களுக்கு (ஆரம்பக் கட்டத்திலுள்ள உள்ளார்ந்த தொழில்நுட்ப தொடக்க நிறுவனங்கள் மற்றும் அறிவியலாளர்கள் / பொறியாளர்கள் / மருத்துவர்கள்) வாய்ப்பு வழங்கப் படும்.
12 மாதங்களுக்குப் பயிற்சி மற்றும் உதவி வழங்குதல் ஆகியவற்றின் மூலம் குறிப்பிட்ட பிரச்சினைகளைத் தீர்ப்பதையே இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.