ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட வளர்ந்து வரும் ஆராய்ச்சியாளர்களுக்கு 2023 ஆம் ஆண்டிற்கான ஆஸ்திரேலிய இந்தியப் புத்தாய்வு மாணவர்கள் அந்தஸ்து ஆனது வழங்கப்பட்டுள்ளது.
AIRS புத்தாய்வு மாணவர் அந்தஸ்து திட்டமானது இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான இருதரப்புத் திட்டமாகும்.
இது கல்வி சார் உறவுகளை வலுப்படுத்த முற்படும் 2035 ஆம் ஆண்டு செயல் திட்டத்திற்கான இந்தியப் பொருளாதார உத்திக்கான புதுப்பித்தலின் ஒரு பகுதி ஆகும்.
இது ஆஸ்திரேலிய இந்திய நிறுவனத்தின் தலைமையில் மேற்கொள்ளப் படுகிறது.
இந்தத் திட்டத்திற்கான நிதியானது ஆஸ்திரேலிய நாட்டு அரசின் கல்வித் துறையால் வழங்கப் படுகிறது.
இது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவற்றுக்கு இடையிலான ஆராய்ச்சி சார்ந்த ஒத்துழைப்புகள் மற்றும் மாணவர் இடம்பெயர்வு ஆகியவற்றை ஊக்குவிக்கிறது.
இது 22 ஆஸ்திரேலியப் பல்கலைக் கழகங்கள் மற்றும் 37 இந்திய உயர் கல்வி நிறுவனங்களிடையே ஒத்துழைப்பைக் கொண்டு வர முயல்கிறது.