இந்திய ஆயுதப்படைகள் AK-203 தாக்குதல் துப்பாக்கிகளின் புதிய தொகுதியைப் பெற உள்ளன.
இந்தோ-ரஷ்ய ரைபிள்ஸ் பிரைவேட் லிமிடெட் (IRRPL) என்பது உத்தரப் பிரதேசத்தின் அமேதியில், இந்தியாவில் 'ஷேர்' என்று பெயரிடப்பட்ட AK-203 ரக துப்பாக்கிகளை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்காக நிறுவப்பட்ட ஒரு கூட்டு துணிகர நிறுவனம் ஆகும்.
AK-203 துப்பாக்கிகள் ஆனது AK-47 மற்றும் AK-56 துப்பாக்கிகளுடன் ஒப்பிடும் போது கணிசமாக நவீனமானவையாகும்.
அவை கலாஷ்னிகோவ் தொடரில் மிகவும் ஆபத்தான துப்பாக்கிகளில் ஒன்றாகும்.