அரசு அங்கீகரித்த மாதிரிகள் மற்றும் உற்பத்தியாளர்களின் பட்டியல் (ALMM) கட்டமைப்பை 2028 ஆம் ஆண்டு ஜூன் 1 முதல் அமலுக்கு வரும் வகையில் சூரிய ஆற்றல் சிலிக்கான் கட்டிகள் மற்றும் சிலிக்கான் தட்டுகள் / சில்லுகள் உள்ளடக்கி அரசு விரிவாக்கம் செய்துள்ளது.
இது சூரியசக்தி உபகரணங்களின் தரம் மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்காக புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தால் 2019 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
அரசு நிதியுதவி பெறும் சூரியசக்தி திட்டங்களில் அங்கீகரிக்கப்பட்ட உற்பத்தியாளர்கள் மற்றும் மாதிரிகளை மட்டுமே பயன்படுத்த இது அனுமதிக்கிறது.
இந்தக் கட்டமைப்பில் பட்டியல்-I (சூரிய ஒளிமின்னழுத்தத் தொகுதிகள்), பட்டியல்-II (சூரிய ஒளிமின்னழுத்த செல்கள்) மற்றும் பட்டியல்-III (சூரிய ஆற்றல் சிலிக்கான் கட்டிகள் மற்றும் சிலிக்கான் தட்டுகள் / சில்லுகள்) ஆகியவை அடங்கும்.