பிரேசிலில் உள்ள அறிவியலாளர்கள் மனாஸ் அருகே அமேசான் காடுகளின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் கார்பன் டை ஆக்சைடு செறிவூட்டல் (AmazonFACE-Free-Air Carbon Dioxide Enrichment) பரிசோதனையைத் தொடங்கினர்.
இந்த திட்டமானது, அமேசான் மழைக்காடுகள் ஆனது 2050–2060 ஆம் ஆண்டிற்குள் எதிர்பார்க்கப் படும் அதிகரித்த வளிமண்டல கார்பன் டை ஆக்சைடு உமிழ்வு அளவுகளுக்கு எவ்வாறு வினையாற்றும் என்பதை ஆய்வு செய்கிறது.
இந்தச் சோதனைக்காக 50–70 முதிர்ந்த மரங்களின் குழுக்களைச் சுற்றி 6 எஃகு கோபுர வளையங்கள் நிறுவப்பட்டன.
3 வளையங்கள் எதிர்கால CO₂ செறிவுகளுக்கு வெளிப்படும் அமைப்பாகவும், மீதமுள்ள வளையங்கள் கட்டுப்பாட்டு அடுக்குகளாகவும் செயல்பட்டன.
உணர்வுக் கருவிகள் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒளிச்சேர்க்கை, ஆக்ஸிஜன் வெளியீடு மற்றும் நீர் நீராவிப் பரிமாற்றம் குறித்தத் தரவைத் தொடர்ந்து பதிவு செய்கின்றன.
இந்தச் சோதனை பருவநிலை மாதிரியாக்கம், மழைக்காடு கார்பன் சேமிப்பு மற்றும் சர்வதேச பருவநிலை கொள்கை விவாதங்களுக்கு முக்கியமான தரவை வழங்குகிறது.