இந்தியத் தபால் துறையானது புது டெல்லியில் ‘AMRITPEX 2023’ என்ற தலைப்பிலான ஒரு தேசிய அளவிலான அஞ்சல்தலை கண்காட்சியை ஏற்பாடு செய்தது.
300 பங்கேற்பாளர்களால் சேகரிக்கப்பட்ட ஒரு லட்சத்திற்கும் அதிகமான தபால் தலைகளைக் காட்சிப்படுத்தும் வகையிலான 1,400 படக்காட்சிகள் இதில் இடம் பெற உள்ளன.
பல ஆண்டுகளாக நிலவி வரும் இந்தியாவின் வரலாறு, கலாச்சாரம், கலை மற்றும் பாரம்பரியத்தை முன்னிலைப்படுத்தும் வகையில் இந்தக் கண்காட்சியில் அஞ்சல் தலைகள் மற்றும் புகைப்படச் சேகரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன.