மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகமானது அங்கிகார் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
இது பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா (நகர்ப்புறம்) பயனாளிகளை மற்ற மத்திய அரசின் திட்டங்களான உஜ்ஜாவாலா மற்றும் ஆயுஷ்மான் பாரத் போன்ற திட்டங்களுக்குள் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டது.
அங்கிகார் ஆனது பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனாவின் (நகர்ப்புறம்) அனைத்துப் பயனாளிகளையும் படிப்படியாக அணுகுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகமானது இந்தியாவின் எளிதில் பாதிக்கப் படக்கூடிய பகுதிகளின் அட்லஸ் எனும் மின்னணு கல்வியையும் தொடங்கியுள்ளது.
இது இயற்கைப் பேரிடர்கள் பற்றிய விழிப்புணர்வையும் புரிதலையும் வழங்கும் ஒரு தனித்துவமான பாடமாகும். மேலும் இது பல்வேறு அபாயங்களினால் எளிதில் பாதிப்படையக் கூடிய பகுதிகளை அடையாளம் காண உதவுகிறது.