தொழில்நுட்பத் தகவல் முன்கணிப்பு மற்றும் ஆய்வு ஆணையமானது (TIFAC - Technology Information, Forecasting and Assessment Council) சமீபத்தில், “உள்ளீட்டு மருந்து மூலப் பொருட்கள்” (API - Active Pharmaceutical Ingredients) குறித்த ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையுடன் “இந்தியாவில் தயாரிப்போம் என்ற திட்டத்திற்கான தலைசிறந்த இடையீடுகள் : கோவிட் – 19 தொற்றிற்குப் பின்பு” என்ற தலைப்பு கொண்ட ஒரு வெள்ளை அறிக்கையும் வெளியிடப் பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள மருந்துத் தொழிற்துறையானது அளவின் அடிப்படையில் உலகில் சீனா மற்றும் இத்தாலிக்கு அடுத்து 3வது மிகப்பெரிய நாடாகவும் மதிப்பின் அடிப்படையில் 14வது மிகப்பெரிய நாடாகவும் உள்ளது.
API என்பது மருந்தியல் செயல் ஏற்படக் காரணமாகவுள்ள மருந்தில் இருக்கும் பொருட்கள் அல்லது பொருட்களின் ஒரு கலவையாகும்.
TIFAC என்பது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் ஒரு தன்னாட்சி அமைப்பாகும்.