TNPSC Thervupettagam
July 27 , 2021 1472 days 604 0
  • பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்திய இராணுவத்தின் பனிச்சறுக்குப் பயணத்தைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
  • இப்பயணமானது இமாலய மலைத்தொடர் பகுதிகளில் நடத்தப்பட்டது.
  • ARMEX – 21 எனப்படும் இந்தப் பயணமானது மார்ச் 10 அன்று லடாக்கிலுள்ள காரகோரம் கணவாயில் கொடியசைத்துத் தொடங்கப்பட்டு 119 நாட்களில் 1,660 கி.மீ. தூரம் கடந்து ஜூலை 06 அன்று உத்தரகாண்ட்டிலுள்ள மலரியில் முடிவடைந்தது.
  • இந்திய நாட்டிலும் இந்திய இராணுவத்திலும் சாகச செயல்முறைகளை ஊக்குவிப்பதற்காக இமாலயப் பகுதியின்  மலைத் தொடர்களில் ARMEX-21 பயணம் மேற்கொள்ளப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்