ASEAN-இந்திய நாடுகளின் 3வது கடைமட்டப் புத்தாக்க மன்றம்
December 29 , 2022 959 days 475 0
ASEAN-இந்திய நாடுகளின் 3வது கடைமட்டப் புத்தாக்க மன்றம் மற்றும் இரண்டாவது அரசாங்கக் கூட்டம் ஆனது கம்போடியாவில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் நடத்தப்பட்ட கடைமட்டப் புத்தாக்கங்களுக்கானப் போட்டியில் பீகாரைச் சேர்ந்த ஷாலினி குமாரி என்பவர் உருவாக்கிய 'நடப்பதற்கு ஏதுவான முறையில் சரி செய்யக் கூடிய செயற்கைக் கால்களுடன் கூடிய ஊன்றுகோல்' என்ற கண்டுபிடிப்பானது முதல் பரிசைப் பெற்றது.
இரண்டாவது மற்றும் மூன்றாம் பரிசுகள் ஆகியவற்றினை முறையே பிலிப்பைன்ஸ் மற்றும் மியான்மரைச் சேர்ந்த கடைமட்டப் புத்தாக்க ஆய்வாளர்கள் வென்றனர்.
முதல் இரண்டு மன்றங்கள் முறையே இந்தோனேசியா (2018) மற்றும் பிலிப்பைன்ஸ் (2019) ஆகிய நாடுகளில் நடைபெற்றன.