பிராந்திய மற்றும் தேசிய அளவில் டெங்கு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த தினமானது கடைப்பிடிக்கப்படுகிறது.
இது தென்கிழக்காசிய நாடுகள் கூட்டமைப்பினால் (Association of South East Asian Nations – ASEAN) அனுசரிக்கப் படுகிறது.
இந்த தினத்திற்கான கருத்துரு, “பெருந்தொற்றின் மத்தியில் டெங்குவிற்கு எதிராக ஒன்றிணையும் ASEAN” (ASEAN Unite Against Dengue Amidst the Pandemic) என்பதாகும்.
2021 ஆம் ஆண்டிற்கான ASEAN தலைமையின் கருத்துரு, “We care, We prepare, We prosper” என்பதாகும்.
2010 ஆம் ஆண்டில் நடைபெற்ற 10வது ASEAN சுகாதார அமைச்சர்கள் சந்திப்பானது ஜுன் 15 ஆம் தேதியினை ASEAN டெங்கு தினமாக அறிவித்தது.
முதலாவது அதிகாரப் பூர்வமான ASEAN டெங்கு தினமானது 2011 ஆம் ஆண்டு ஜுன் 15 அன்று கடைபிடிக்கப் பட்டது.
இந்தியாவானது மே 16 ஆம் தேதியன்று தேசிய டெங்கு தினத்தினை கடைபிடிக்கிறது.