சமீபத்தில் ஊரகப்புற இந்தியாவிற்கான வருடாந்திரக் கல்வியின் நிலை குறித்த ஒரு அறிக்கையானது (Annual Status of Education Report - ASER) பிரதாம் கல்வி அறக்கட்டளையினால் வெளியிடப்பட்டுள்ளது.
முக்கிய அம்சங்கள்
இந்த ஆய்வின் படி, ஆய்வு செய்யப்பட்ட குழந்தைகளில் மூன்றில் 1 குழந்தை மட்டுமே நிகழ்நேர கற்றல் வசதியைப் பெறுகின்றன.
2020 ஆம் ஆண்டில் 3% ஊரகக் குழந்தைகள் பள்ளிகளில் சேராமல் உள்ளனர்.
ஏறத்தாழ மூன்றில் 1 குழந்தை கற்றல் செயல்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை.
ஆய்வு செய்யப்பட்ட குழந்தைகளில் 47.4% குழந்தைகள் மேற்கு வங்கத்தில் திறன்பேசிகளை அணுகும் வாய்ப்பைப் பெற்றுள்ளன.
இது ஜம்மு காஷ்மீரில் 77.1% ஆகவும், பஞ்சாப்பில் 88% ஆகவும், இமாச்சலப் பிரதேசத்தில் 90% ஆகவும், ஹரியானாவில் 82.3% ஆகவும் உள்ளன.
கேரளாவில் உள்ள குழந்தைகள் 94.3% என்ற அளவுடன் இந்தப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளன.
கற்றல் பொருட்களை அனுப்புவதற்கு மிகவும் பொதுத் தகவல் தொடர்பு ஊடகமாக கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்) விளங்குகின்றது.
இந்தியாவில் முதல் தலைமுறையாக பள்ளிக் கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றது.