TNPSC Thervupettagam

ASER அறிக்கை 2019

January 14 , 2020 2000 days 665 0
  • பிரதாம் என்ற ஒரு இலாப நோக்கற்ற அமைப்பானது தனது வருடாந்திர அறிக்கையான “2019 ஆம் ஆண்டில் கல்வியின் நிலை” என்ற ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • இந்த அறிக்கையானது இந்தியாவில் உள்ள 26 மாவட்டங்களில் பள்ளியில் பயிலும் 4 முதல் 8 வயதுக்குட்பட்ட 36,000 குழந்தைகளிடம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில் அமைந்துள்ளது.

முக்கியக் குறிப்புகள்

  • சுமார் 56.8% சிறுமிகள் மற்றும் 50.4% சிறுவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர் என்று இந்த அறிக்கை கூறுகின்றது.
  • அரசுப் பள்ளிகளில் சேர்க்கப்படும் சிறுமிகளின் எண்ணிக்கையானது சிறுவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இருக்கின்றது.
  • அதே சமயத்தில், தனியார் பள்ளிகளில் சேரும் சிறுவர்களின் எண்ணிக்கையானது சிறுமிகளின் எண்ணிகையை விட அதிகமாக இருக்கின்றது.
  • கல்விச் சட்டம், 2009ன் (கல்வி உரிமைச் சட்டம்) படி, குழந்தைகள் 6 வயதில் பள்ளியில் முதலாம் வகுப்பில் சேர்க்கப்பட வேண்டும்.
  • ஆனால் இந்த அறிக்கையின் படி, முதலாம் வகுப்பில் சேர்க்கப்படும் ஒவ்வொரு 10 குழந்தைகளில் 4 குழந்தைகள் 5 வயதுக்குக் குறைவானவர்களாக உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்