TNPSC Thervupettagam

ASI டிஜிட்டல் கல்வெட்டுத் திட்டம்

December 11 , 2025 15 days 139 0
  • இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் (ASI) கல்வெட்டுப் பிரிவு ஆனது அனைத்து தமிழ் கல்வெட்டுகளையும் ஸ்கேன் செய்து எளிதாக அணுகுவதற்காக ஒரு பிரத்தியேக இயங்கலை களஞ்சியத்தில் பதிவேற்றுவதன் மூலம் டிஜிட்டல் மயமாக்கத் தொடங்கி உள்ளது.
  • ASI ஆனது 24,806 தமிழ் கல்வெட்டுப் படிகளைக் கொண்டுள்ளது என்பதோடு மேலும் 13,740 கல்வெட்டுகளுக்கான ஸ்கேன் செய்யும் பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன என்ற நிலையில் இப்பணியானது கிட்டத்தட்ட சுமார் 25,000 தமிழ்க் கல்வெட்டுகளையும் உள்ளடக்கியுள்ளது.
  • இந்தப் பிரிவானது அரபு மற்றும் பாரசீக மொழிகள் உள்ளிட்ட பிற இந்திய மொழிகளிலும் உள்ள கல்வெட்டுகளின் கல்வெட்டுப் படிகளையும் டிஜிட்டல் மயமாக்கி வருகிறது.
  • இந்தப் பணி பாரத் பகிரப்பட்ட கல்வெட்டுக் களஞ்சியத்தின் (BharatSHRI) ஒரு பகுதி ஆகும்.
  • BharatSHRI என்பது ஒரு டிஜிட்டல் கல்வெட்டு அருங்காட்சியகமாகும் என்பதோடு இது பதிவு செய்யப் பட்ட அனைத்து கல்வெட்டுகளின் முழுமையான டிஜிட்டல் காப்பகத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஒவ்வொரு ஸ்கேன் செய்யப்பட்ட கல்வெட்டுப் படிகளிலும் அதன் இருப்பிடம், மன்னர், வம்சம், மொழி, எழுத்து, காலம் மற்றும் எழுத்தாக்கம் ஆகியவற்றைக் குறிப்பிடும் விளக்கமான மாபெரும் தரவு உள்ளது.
  • இந்தத் திட்டம் அறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் கல்வெட்டுத் தரவை ஒரே டிஜிட்டல் தளம் மூலம் எளிதாக அணுக உதவுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்