TNPSC Thervupettagam

ASISSE கணக்கெடுப்பு

April 9 , 2026 3 days 107 0
  • தேசியப் புள்ளியியல் அலுவலகம் (NSO) 2024-25 ஆம் ஆண்டிற்கான முதலாவது ASISSE கணக்கெடுப்பைத் தொடங்கியது.
  • ASISSE (பதிவு செய்யப்பட்ட சேவைத் துறை நிறுவனங்களின் ஆண்டு ஆய்வு) என்பது பதிவு செய்யப்பட்ட சேவைத் துறை நிறுவனங்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டாண்மை (LLP) நிறுவனங்களின் தரவுகளைச் சேகரிக்கிறது.
  • இது வர்த்தகம், போக்குவரத்து, விருந்தோம்பல், தகவல் தொழில்நுட்பம் (IT), கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளை உள்ளடக்கியது.
  • இந்த ஆய்வு சரக்கு மற்றும் சேவை வரி வலையமைப்புத் (GSTN) தரவைப் பயன்படுத்துகிறது மற்றும் சுமார் 21 லட்சம் நிறுவனங்களை உள்ளடக்கியது.
  • இது 2008-ஆம் ஆண்டின் புள்ளிவிவரச் சேகரிப்புச் சட்டம் மற்றும் 2023-ஆம் ஆண்டின் ஜன் விஸ்வாஸ் சட்டத்தின் கீழ் நடத்தப்படுகிறது.
  • இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 50%-க்கும் மேல் பங்களிக்கும் சேவைத் துறையை துல்லியமாக அளவிட இது உதவுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்