தேசியப் புள்ளியியல் அலுவலகம் (NSO) 2024-25 ஆம் ஆண்டிற்கான முதலாவது ASISSE கணக்கெடுப்பைத் தொடங்கியது.
ASISSE (பதிவு செய்யப்பட்ட சேவைத் துறை நிறுவனங்களின் ஆண்டு ஆய்வு) என்பது பதிவு செய்யப்பட்ட சேவைத் துறை நிறுவனங்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டாண்மை (LLP) நிறுவனங்களின் தரவுகளைச் சேகரிக்கிறது.
இது வர்த்தகம், போக்குவரத்து, விருந்தோம்பல், தகவல் தொழில்நுட்பம் (IT), கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளை உள்ளடக்கியது.
இந்த ஆய்வு சரக்கு மற்றும் சேவை வரி வலையமைப்புத் (GSTN) தரவைப் பயன்படுத்துகிறது மற்றும் சுமார் 21 லட்சம் நிறுவனங்களை உள்ளடக்கியது.
இது 2008-ஆம் ஆண்டின் புள்ளிவிவரச் சேகரிப்புச் சட்டம் மற்றும் 2023-ஆம் ஆண்டின் ஜன் விஸ்வாஸ் சட்டத்தின் கீழ் நடத்தப்படுகிறது.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 50%-க்கும் மேல் பங்களிக்கும் சேவைத் துறையை துல்லியமாக அளவிட இது உதவுகிறது.