ASW குறைவான ஆழம் கொண்ட பகுதியில் இயங்கும் நீர்வழி வாகனங்கள் (CSL) திட்டம்
December 7 , 2023 593 days 314 0
இந்தியக் கடற்படைக்கான 3 நீர்மூழ்கி எதிர்ப்புப் போர்க் கப்பல்கள் கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் இயக்கத் தொடங்கப்பட்டன.
இந்தக் கப்பல்களுக்கு INS மாஹே, INS மல்வான் மற்றும் INS மங்ரோல் என்று பெயரிடப்பட உள்ளது.
இந்தக் கப்பல்கள் ASW என்ற குறைவான ஆழம் கொண்ட பகுதியில் இயங்கும் நீர்வழி வாகனங்கள் (CSL) திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
இது கொச்சியில் உள்ள கொச்சின் கப்பல் கட்டும் நிறுவனத்தால் கட்டமைக்கப் படுகிறது.
இவைக் கடலோரப் பகுதிகளில் நீர்மூழ்கி எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், குறைந்த முக்கியத்துவம் கொண்ட கடல்சார் செயல்பாடுகள் (LIMO) மற்றும் கண்ணிவெடிகளை அகற்றும் செயல்பாடுகளுக்காகப் பயன்படுத்தப் படுவதற்காகவும் வேண்டி கட்டமைக்கப்பட்டுள்ளன.