AU சிறு நிதி வங்கி (AU SFB) ஆனது இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து (RBI) சிறு நிதி வங்கி என்ற நிலையிலிருந்து (SFB) பொது வங்கியாக மாறுவதற்கான கொள்கை ரீதியான முதன்மை ஒப்புதலைப் பெற்றது.
இது AU SFB வங்கியினை பொது வங்கி என்ற அந்தஸ்துக்கான RBI ஒப்புதலைப் பெற்ற இந்தியாவின் முதல் சிறு நிதி வங்கியாக மாற்றுகிறது.
AU சிறு நிதி வங்கியானது 1996 ஆம் ஆண்டில் AU நிதியமைப்பாக செயல்படத் தொடங்கியது. மேலும் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஒரு சிறு நிதி வங்கியாக மாறியது.
இந்த வங்கியானது அளவு மற்றும் சேவை வழங்கீட்டில் இந்தியாவின் மிகப் பெரிய சிறு நிதி வங்கியாக உள்ளது.