AUKUS அமைப்பில் இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் இணைப்பினை அமெரிக்கா நிராகரிப்பு
September 28 , 2021 1328 days 593 0
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன் மற்றும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆகியோர் இணைந்து AUKUS எனப்படும் ஒரு முத்தரப்புப் பாதுகாப்புக் கூட்டணியை உருவாக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.
இதன்கீழ், ஆஸ்திரேலியா முதல்முறையாக அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களைப் பெற உள்ளது.
உத்திசார் இந்தோ பசிபிக் பகுதியில் 21 ஆம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ள ஆஸ்திரேலியா மற்றும் பிரிட்டன் ஆகியவற்றுடனான புதிய முத்தரப்புப் பாதுகாப்புப் கூட்டிணைவில் இந்தியா (அ) ஜப்பான் நாடுகளை இணைப்பதற்கு அமெரிக்கா நிராகரித்துள்ளது.