இது பறவை இனங்களின் முதல் ஒருங்கிணைந்த உலகளாவியச் சரிபார்ப்புப் பட்டியல் ஆகும்.
இது பறவைகளின் வளங்காப்பு முயற்சிகளுக்கு மிக முக்கியமானதாக கருதப் படும் பறவை வகைபிரிப்பில் தெளிவு மற்றும் நிலைத் தன்மையை வழங்குவதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
பறவை சரிபார்ப்புப் பட்டியல்கள் குறித்தச் செயற்குழுவின் நான்கு ஆண்டு பணிக்குப் பிறகு இது செயல்பாட்டுக்கு வந்தது.
இந்தப் புதிய சரிபார்ப்புப் பட்டியல் ஆனது சர்வதேசப் பறவையியல் குழு (IOC) மற்றும் கிளெமென்ட்ஸ் பட்டியலுக்கு மாற்றாக இருக்கும் என்பதோடு இது ஆண்டுதோறும் புதுப்பிக்கப்படும்.
இது BirdLife International அமைப்பின் அறிக்கையின்படி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
BirdLife International என்பது பறவைகள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களை மிக நன்குப் பாதுகாக்கச் செயல்படும் அரசு சாரா நிறுவனங்களின் உலகளாவியக் கூட்டாண்மை ஆகும்.
பறவைகள் மீதான சரிபார்ப்புப் பட்டியல்களுக்கான ஒரு செயற்குழுவில் பேர்டு லைப் இன்டர்நேஷனல், கார்னல் பறவையியல் ஆய்வகம், அமெரிக்கப் பறவையியலாளர் சமூகம், சர்வதேசப் பறவையியலாளர் ஒன்றியம் மற்றும் அவிபேஸ் (Avibase) அமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகள் அடங்குவர்.
இந்தப் பட்டியலில் 11,131 இனங்கள், 19,879 கிளையினங்கள், 2,376 பேரினங்கள், 252 குடும்பங்கள் மற்றும் 46 வரிசைகள் உள்ளன.