TNPSC Thervupettagam
June 17 , 2025 17 days 80 0
  • இது பறவை இனங்களின் முதல் ஒருங்கிணைந்த உலகளாவியச் சரிபார்ப்புப் பட்டியல் ஆகும்.
  • இது பறவைகளின் வளங்காப்பு முயற்சிகளுக்கு மிக முக்கியமானதாக கருதப் படும்  பறவை வகைபிரிப்பில் தெளிவு மற்றும் நிலைத் தன்மையை வழங்குவதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • பறவை சரிபார்ப்புப் பட்டியல்கள் குறித்தச் செயற்குழுவின் நான்கு ஆண்டு பணிக்குப் பிறகு இது செயல்பாட்டுக்கு வந்தது.
  • இந்தப் புதிய சரிபார்ப்புப் பட்டியல் ஆனது சர்வதேசப் பறவையியல் குழு (IOC) மற்றும் கிளெமென்ட்ஸ் பட்டியலுக்கு மாற்றாக இருக்கும் என்பதோடு இது ஆண்டுதோறும் புதுப்பிக்கப்படும்.
  • இது BirdLife International அமைப்பின் அறிக்கையின்படி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • BirdLife International என்பது பறவைகள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களை மிக நன்குப் பாதுகாக்கச் செயல்படும் அரசு சாரா நிறுவனங்களின் உலகளாவியக் கூட்டாண்மை ஆகும்.
  • பறவைகள் மீதான சரிபார்ப்புப் பட்டியல்களுக்கான ஒரு செயற்குழுவில் பேர்டு லைப் இன்டர்நேஷனல், கார்னல் பறவையியல் ஆய்வகம், அமெரிக்கப் பறவையியலாளர் சமூகம், சர்வதேசப் பறவையியலாளர் ஒன்றியம் மற்றும் அவிபேஸ் (Avibase) அமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகள் அடங்குவர்.
  • இந்தப் பட்டியலில் 11,131 இனங்கள், 19,879 கிளையினங்கள், 2,376 பேரினங்கள், 252 குடும்பங்கள் மற்றும் 46 வரிசைகள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்