B20 இந்தோனேசியா உலகளாவியப் பேச்சுவார்த்தை பற்றிய மாநாடு
October 23 , 2022 1262 days 666 0
தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறையானது, இந்திய தொழில் துறை கூட்டமைப்புடன் இணைந்து B20 இந்தோனேசியா உலகளாவியப் பேச்சு வார்த்தை மாநாட்டினை நடத்தியது.
2022 ஆம் ஆண்டு B20 இந்தோனேசியா உலகளாவியப் பேச்சுவார்த்தை மாநாடானது இந்திய அரசினால் நடத்தப்பட்டது.
இது B20 இந்தோனேசிய அமைப்பின் கொள்கைப் பரிந்துரைகளுடன் இந்தியத் தொழில் துறையின் கருத்துகளைச் சீரமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
வணிகம் 20 (B20) என்ற அமைப்பானது 2010 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
இது உலகளாவிய வணிகச் சமூகத்துடனான அதிகாரப்பூர்வ G20 உரையாடல் மன்றம் ஆகும்.