TNPSC Thervupettagam
September 12 , 2026 7 hrs 0 min 47 0
  • திட ஏவுகல உந்துசக்தியான BAM-H24-க்காக DRDO மற்றும் ஹைதராபாத் பல்கலைக் கழகத்திற்கு இந்தியக் காப்புரிமை அலுவலகம் காப்புரிமையை வழங்கியுள்ளது.
  • BAM-H24 என்பது திட ராக்கெட் எரிபொருள், எரிபொருள் சேர்க்கை அல்லது எரிதல்-விகித முடுக்கியாகப் பயன்படுத்த வடிவமைக்கப்பட்ட போரான், ஹைட்ரஜன் மற்றும் நைட்ரஜன் நிறைந்த ஆற்றல்மிக்க சேர்மமாகும்.
  • இது வேதியியல் மற்றும் வெப்ப ரீதியாக நிலையானது, நீர் உறிஞ்சாதது மற்றும் தாக்கம் மற்றும் உராய்வுக்கு மிகவும் உணர்வற்றது என விவரிக்கப்பட்டுள்ளது.
  • இந்தச் சேர்மம் உயர் ஆற்றல் பொருட்களில் மேம்பட்ட ஆராய்ச்சி மையத்தின் (ACRHEM) ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஹைதராபாத் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப் பட்டது.
  • இந்தப் பொருள் பாதுகாப்பு உந்துவிசை அமைப்புகள் மற்றும் விண்வெளி ஏவுதள வாகனங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்