இது இந்தியாவின் முதல் தானியங்கி வௌவால் கண்காணிப்பு, கண்டறிதல் அமைப்பு ஆகும்.
நிகழ்நேர ஒலிப் பகுப்பாய்வைப் பயன்படுத்தி வௌவால் இனங்களைக் கண்டறிந்து வகைப்படுத்துவதற்காக இது வெற்றிகரமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இது பெங்களூருவில் உள்ள இந்திய மனிதக் குடியேற்ற நிறுவனத்தால் (IIHS) உருவாக்கப் பட்டது.
சூரிய அஸ்தமனத்தில் செயல்படத் தொடங்கும் இது வௌவால் சமிஞ்சைகளை பிரித்து காணவும் பகுப்பாய்வு செய்யவும் வேண்டி ராஸ்பெர்ரி பை நுண்செயலியை பயன்படுத்துகிறது.
அறியப்பட்ட வௌவால் இனங்களுடன் சமிக்ஞையான கட்டமைப்புகளைப் பொருத்தி பார்க்க இது convolutional neural networks (CNN) எனப்படும் எந்திரக் கற்றல் மாதிரியைப் பயன்படுத்துகிறது.
இது நிகழ்நேர வௌவால் சமிக்ஞை பதிவு மற்றும் வகைப்பாட்டிற்கான உலகின் முதல் ஒருங்கிணைந்த அலகு ஆகும்.