BBC நிறுவனத்தின் 2023 ஆம் ஆண்டின் முன்னணி 100 பெண்கள் பட்டியல்
November 30 , 2023 533 days 331 0
BBC நிறுவனத்தின் 2023 ஆம் ஆண்டின் முன்னணி 100 பெண்கள் பட்டியல் ஆனது பெண்களின் உரிமைகள் மற்றும் உலகளவில் பெண்களை ஊக்குவிக்கும் பல்வேறு வாழ்க்கை அனுபவங்களை எடுத்துக்காட்டுகிறது.
இப்பட்டியலில் நடிகை தியா மிர்சா, கிரிக்கெட் வீரர் ஹர்மன்ப்ரீத் கௌர், புகைப்படக் கலைஞர் ஆரத்தி குமார் ராவ் மற்றும் திபெத்திய புத்த துறவி ஜெட்சன்மா டென்சின் பால்மோ ஆகிய இந்தியப் பெண்களும் இடம் பெற்றுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பின் நல்லெண்ணத் தூதராக பணியாற்றுகின்ற நடிகை மிர்சா, பருவநிலை மாற்றம், தூயக் காற்று மற்றும் வனவிலங்குப் பாதுகாப்பு போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்காக தீவிரமாக போராடி வருகிறார்.
கௌர் சமீபத்தில், விஸ்டன் எனப்படும் கிரிக்கெட் குறிப்புப் புத்தகத்தில் ஆண்டின் சிறந்த ஐந்து கிரிக்கெட் வீரர்களில் ஒருவராகப் பெயரிடப்பட்ட முதல் இந்தியப் பெண்மணி என்ற வரலாற்றினைப் படைத்தார்.
தெற்காசியா முழுவதும் பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் மாறிவரும் நிலப் பரப்பை ஆவணப்படுத்தும் அவரது தாக்கம் மிக்கப் பணிக்காக ஆரத்தி குமார்-ராவ் இத்தகைய அங்கீகாரத்தினைப் பெற்றுள்ளார்.