போபாலில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமானது (IISER) தாவரங்கள் இருளில் இருந்து ஒளியை நோக்கிய முதல் நடவடிக்கையை எடுக்க ஓர் ஒற்றைப் புரதம் உதவுகிறது என்பதைக் கண்டறிந்துள்ளது.
எத்திலீன் ஆனது BBX32 புரதத்தினைத் தூண்டி இயக்குகிறது என்றும், ஒளி ஆனது BBX32 அழிக்கப்படாமல் பாதுகாக்கிறது என்றும் அவர்கள் கண்டறிந்தனர்.
BBX32 புரதத்தின் பங்கு, விதை முளைத்த முனை கொக்கியை மிக நீண்ட நேரம் மூடி வைத்திருப்பதாகும்.
கூடுதல் எத்திலீன் இல்லாமல், BBX32 பிறழ்ச்சிகள் சாதாரண தாவரங்களைப் போலவே செயல்படுகின்ற அதே சமயத்தில் மிகவும் அதிக எத்திலீன் அல்லது மணல் பரப்புடன், இழையானது /கொக்கி மிக விரைவில் திறக்கிறது.
எத்திலீன் ஆனது BBX32 புரதத்தினை ஓரளவு பாதுகாக்கிறது.
ஆனால் வளர்ந்து வரும் நாற்றுகளானது முதலில் பகல் வெளிச்சத்தை உணர்ந்தவுடன், COP1 என்ற நொதியின் செயல்பாடு குறைவதனால் அப்புரதம் கொக்கியின் குழிவான பக்கத்தில் உருவாகி அதை மேலும் கூடுதலாக சிறிது நேரம் மூடி வைத்திருக்க என்று அனுமதிக்கிறது.