TNPSC Thervupettagam
January 30 , 2024 108 days 217 0
  • 2006-07 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட BCCI விருதுகள் மகத்தான கிரிக்கெட் சாதனைகளைப் படைத்த வீரர்களை கௌரவிக்கின்றன.
  • 2022-23 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியதற்காக அஸ்வின், திலீப் சர்தேசாய் விருதை வென்றுள்ளார்.
  • அஸ்வின் தனது தொழில்முறை வாழ்க்கையில் இரண்டாவது முறையாக ஆண்டின் சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான பாலி உம்ரிகர் விருதையும் வென்றுள்ளார்.
  • 2019-20, 2022-23 மற்றும் 2021-22 ஆகிய ஆண்டுகளில் முறையே முகமது ஷமி, சுப்மன் கில் மற்றும் பும்ரா சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கான விருதுகளைப் பெற்றனர்.
  • சிறந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனைக்கான ஜக்மோகன் டால்மியா கோப்பையினை (உள்நாட்டு இளையோர் பிரிவு) காஷ்வீ கௌதம் வென்றார்.
  • ரவி சாஸ்திரி மற்றும் ஃபரோக் எஞ்சினியர் ஆகியோருக்கு கர்னல் C.K.நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
  • ஒருநாள் போட்டிகளில் அதிக ரன் எடுத்தவர்கள் விருது - மகளிர்: பூனம் ரௌத் (2019-20), மிதாலி ராஜ் (2020-21), ஹர்மன்பிரீத் கௌர் (2021-22), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (2022-23).
  • சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீராங்கனைகள் விருது - மகளிர் 2019-20 ஆம் ஆண்டில் தீப்தி ஷர்மா, 2020-22 ஆம் ஆண்டில் ஸ்மிருதி மந்தனா மற்றும் 2022-2023 ஆம் ஆண்டில் தீப்தி ஷர்மா.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்