சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகமானது தடையற்ற வாகனப் போக்குவரத்து என்ற ஒரு வசதியினை வழங்குவதற்காக BH-தொடர் என்ற ஒன்றைத் தொடங்கியுள்ளது.
இந்தப் பிரிவு முத்திரை கொண்ட வாகனங்களின் உரிமையாளர்கள் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு இடம் பெயர்கையில் இனி அந்த வாகனத்திற்கு என்று ஒரு புதிய பதிவு முத்திரையினைப் பெற வேண்டிய அவசியம் இருக்காது.
இந்தத் தொடரின் கீழான வாகனப் பதிவு வசதியானது பாதுகாப்புத் துறை ஊழியர்கள், மத்திய (அ) மாநில அரசு ஊழியர்கள், 4 (அ) அதற்கு மேற்பட்ட மாநிலங்கள் (அ) ஒன்றியப் பிரதேசத்தில் அலுவலகத்தைக் கொண்டுள்ள மத்திய (அ) மாநில பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் (அ) அமைப்புகளுக்குத் தன்னார்வ அடிப்படையில் கிடைக்கப் பெறும்.
1988 ஆம் ஆண்டு மோட்டார் வாகனச் சட்டத்தின் 47வது பிரிவில், ஒரு வாகனத்தினை அது பதிவு செய்யப்பட்ட மாநிலத்தைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் 12 மாதங்களுக்கு மேல் ஒருவர் உபயோகிக்க இயலாது எனக் கூறப்பட்டுள்ளது.
அதற்கு பதிலாக அந்த 12 மாதத்திற்குள் புதிய மாநிலத்தின் பதிவு ஆணையத்திடம் ஒரு புதிய பதிவினைச் செய்து கொள்ளலாம்.
இந்த சிரமத்தைக் கருத்தில் கொண்டு இந்தப் புதிய BH தொடரானது தொடங்கப் பட்டுள்ளது.