ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் 2026 ஆம் ஆண்டு நடைபெற்ற AI உச்சி மாநாட்டின் போது, வேளாண் அமைச்சகம் Bharat VISTAAR திட்டத்தின் முதல் கட்டத்தை அறிமுகப் படுத்தி உள்ளது.
இது விவசாயிகளுக்கான பன்மொழி செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான உரையாடும் ஆலோசனை அமைப்பாகும்.
விவசாயிகள் உடனடி பதில்களைப் பெற 155261 என்ற உதவி எண்ணை அழைக்கலாம்.
இது பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா (PMFBY) மற்றும் மண் சுகாதார அட்டை திட்டம் போன்ற சேவைகளை டிஜிட்டல் விவசாயி அடையாள அட்டை இணைக்கும்.
இது மண் பரிசோதனை, விதைகள், உரங்கள், நீர்ப்பாசனம், கடன்கள் மற்றும் காப்பீடு குறித்த வழிகாட்டுதலை வழங்குகிறது.