வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA) ஆனது BHARATI முன்னெடுப்பினைத் தொடங்கியது.
ஏற்றுமதி மேம்பாட்டிற்கான இந்தியாவின் வேளாண் தொழில்நுட்பம், நெகிழ் தன்மை, முன்னேற்றம் மற்றும் தொழில் காப்பு மையத்தை BHARATI குறிக்கிறது.
புதுமை மற்றும் ஏற்றுமதி தயார்நிலையை ஊக்குவிப்பதன் மூலம் 100 வேளாண் தொழில்நுட்பம் மற்றும் வேளாண் உணவு சார் புத்தொழில் நிறுவனங்களை ஆதரிப்பதை இந்த முன்னெடுப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.
முக்கியக் கவனம் செலுத்தும் பகுதிகளில் புவிசார் குறியீடு பெற்றத் தயாரிப்புகள், இயற்கை முறை உணவுகள், அதி ஊட்டம் மிக்க உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் ஆயுஷ் சார்ந்தப் பொருட்கள், செயற்கை நுண்ணறிவு, தொடர் சங்கிலித் தொழில்நுட்பம் மற்றும் இணைய உலகம் (IoT) போன்ற தொழில்நுட்பம் ஆகியவை அடங்கும்.