இந்தியாவின் மொழி செயற்கை நுண்ணறிவு (AI) சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்துவதற்காக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) புது டெல்லியில் BHASHINI சமுதாயப் பயிலரங்கத்தினை ஏற்பாடு செய்தது.
இது MeitY, வாத்வானி AI உடன் இணைந்து டிஜிட்டல் இந்தியா BHASHINI பிரிவினால் (DIBD) ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிகழ்வு தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்தின் (NLTM) கீழ் மொழி AI சூழல் அமைப்பை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தியது.
இது மொழி வல்லுநர்கள், கல்வி நிறுவனங்கள், குடிமைச் சமூக அமைப்புகள் மற்றும் தரவுப் பயிற்சியாளர்களை ஒன்றிணைத்தது.
இந்த அமர்வுகள் தள விரிவாக்கம், பங்கேற்பு சார் நிர்வாகம் மற்றும் பாஷாதான் மூலம் குடிமக்கள் தரவுப் பங்களிப்பு ஆகியவற்றை உள்ளடக்கியது.
பொது டிஜிட்டல் உள்கட்டமைப்பிற்கான பன்மொழி தரவுத் தொகுப்புகளை மேம்படுத்துவதற்காக தரவுத் தொகுப்பு ஏற்பு ஆதரவுக் குழு (DOST) என்ற முன்னெடுப்பு தொடங்கப் பட்டது.