TNPSC Thervupettagam

BIEF விளைவைப் பயன்படுத்தி பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி

July 19 , 2025 3 days 20 0
  • மொஹாலியில் உள்ள நுண் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (INST) ஆராய்ச்சியாளர்கள், வினையூக்கிகளின் மேற்பரப்புகளில் புரோட்டான் உறிஞ்சுதல் பற்றிய புதிய தகவல்களை வெளிக் கொணர்ந்துள்ளனர்.
  • இது மிகவும் திறம் மிக்க பசுமை ஹைட்ரஜன் உற்பத்திக்கு வழி வகுக்கும்.
  • காப்பர் டங்ஸ்டன் ஆக்சைடு (CuWO) மற்றும் காப்பர் ஆக்சைடு (CuO) ஆகியவற்றை இணைத்து, மேம்பட்ட ஹைட்ரஜன் பரிணாம வளர்ச்சிக்காக என உள்ளமைக்கப்பட்ட மின்சார புல (BIEF) விளைவைப் பயன்படுத்த ஒரு புதிய மாறுபட்ட அமைப்பு ஆனது உருவாக்கப் பட்டுள்ளது.
  • இந்த BIEF, ஹைட்ரஜன் பரிணாம எதிர்வினை (HER) செயல்திறனில் மிகவும் நேரடியாக தாக்கத்தினை ஏற்படுத்தி, புரோட்டான் உறிஞ்சுதல் மற்றும் வெளியேற்றலை மாற்றி அமைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
  • சூரிய ஒளி, காற்று அல்லது நீர் மின்சாரம் போன்ற சில புதுப்பிக்கத் தக்க எரிசக்தி ஆதாரங்களைப் பயன்படுத்தி, எந்த பசுமை இல்ல வாயுக்களையும் வெளியிடாமல் நீரின் மின்னாற்பகுப்பு மூலம் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி செய்யப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்