24வது BIMSTEC தினத்தை முன்னிட்டு பிரதமர் ஜுன் 06 அன்று தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
பல்துறைத் தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பிற்கான வங்காள விரிகுடா முன்னெடுப்பானது (Bay of Bengal initiative Multi-Sector Technical and Economic Cooperation – BIMSTEC) ஒரு பிராந்தியப் பலதரப்பு அமைப்பாகும்.
இது ஏழு தெற்கு மற்றும் தெற்காசிய நாடுகளை உள்ளடக்கியதாகும்.
இவை இந்தியா, வங்காளதேசம், நேபாளம், பூடான், இலங்கை, தாய்லாந்து மற்றும் மியான்மர் ஆகியவையாகும்.
இந்தியாவின் தடுப்பூசி மைத்ரி முன்னெடுப்பின் கீழ், இந்திய நாடானது BIMSTEC அமைப்பில் உறுப்பினராக உள்ள தமது அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் உயிர் காக்கும் மருந்துகளை அனுப்பி உள்ளது.
வங்காளதேசம், மியான்மர், நேபாளம், பூடான் மற்றும் இலங்கை உள்ளிட்ட ஐந்து BIMSTEC உறுப்பினர் நாடுகளுக்கு இந்த மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.