TNPSC Thervupettagam

BIMSTEC நாடுகளின் 2வது துறைமுக மாநாடு

July 21 , 2025 2 days 32 0
  • BIMSTEC நாடுகளின் 2வது துறைமுக மாநாடு ஆனது ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப் பட்டினத்தில் இந்திய அரசினால் நடத்தப்பட்டது.
  • இந்த மாநாட்டின் கருத்துரு "Navigating the Future: Blue Economy, Innovation and Sustainable Partnerships" என்பதாகும்.
  • மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சர் (MoPSW) இந்த மாநாட்டினைத் தொடங்கி வைத்தார்.
  • வங்காளதேசம், பூடான், இந்தியா, மியான்மர், நேபாளம், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய உறுப்பினர் நாடுகள் இதில் பங்கேற்றன.
  • BIMSTEC என்பது பல்துறைத் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்னெடுப்பு என்பதைக் குறிக்கிறது.
  • இது 1997 ஆம் ஆண்டில் பாங்காக் பிரகடனம் கையெழுத்தானதன் மூலம் உருவாக்கப் பட்ட ஒரு பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பாகும்.
  • இது வங்காள விரிகுடாவின் எல்லையில் உள்ள தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளை ஒன்றிணைக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்