November 24 , 2025
3 days
54
- இந்தியா உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தனது முதல் CRISPR அடிப்படையிலான மரபணு சிகிச்சைக்கு BIRSA 101 என பெயரிட்டுள்ளது.
- பகவான் பிர்சா முண்டாவின் 150வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் அவரை கௌரவிக்கும் விதமாக இந்த சிகிச்சைக்கு இந்தப் பெயரளிக்கப்பட்டது.
- அரிவாள் வடிவ உயிரணு இரத்த சோகை நோய் முதன்மையாக மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவில் உள்ள பழங்குடியின மக்களைப் பாதிக்கிறது.
- அரிவாள் வடிவ உயிரணு இரத்த சோகை நோய் (SCD) என்பது ஒரு மரபணு இரத்தக் கோளாறு ஆகும்.
- இரத்த சிவப்பணுக்கள் பிறை வடிவமாகி, ஆக்ஸிஜன் போக்குவரத்து குறைதல், கடுமையான இரத்த சோகை, வலி மற்றும் உறுப்பு சேதத்தை ஏற்படுத்துகின்றன.

Post Views:
54