இந்திய தர நிர்ணய பணியகம் (BIS) ஆனது IS 19850:2026 என்பதன் கீழ் E22, E25, E27 மற்றும் E30 எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோல் எரிபொருள்களுக்கான புதிய தர நிலைகளை அறிவித்துள்ளது.
E30 எரிபொருள், பெட்ரோலுடன் 30% எத்தனால் கலக்கப்பட்டதாகும்; மேலும் 2018 ஆம் ஆண்டு தேசிய உயிரி எரிபொருள் கொள்கையின் கீழ் 2030 ஆம் ஆண்டிற்குள் 30% எத்தனால் கலப்பை அடைய இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது.
2024 ஆம் ஆண்டின் தரநிலைக்குப் பதிலாக, டைமெதில் ஈதர் (DME) கலக்கப்பட்ட திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயுவுக்கான (LPG) IS 18698:2026 தரநிலைகளையும் BIS வெளியிட்டுள்ளது.
டைமெதில் ஈதர் (DME) என்பது LPG-க்கு மாற்றாகப் பயன்படுத்தப்படும் தூய்மையாக எரியும் செயற்கை எரிபொருளாகும் என்பதோடு மேலும் உலகளாவிய DME உற்பத்தித் திறனில் சுமார் 90% சீனாவிலேயே உள்ளது.
எரிபொருள் தரம், பாதுகாப்பு மற்றும் குறைவான சுற்றுச்சூழல் பாதிப்பை உறுதி செய்வதற்காக பெட்ரோல், உயிரி எரிபொருள்கள், ஹைட்ரஜன், உயிரி டீசல் மற்றும் பசுமை எரிபொருள்களுக்கான தரநிலைகளை BIS உருவாக்குகிறது.