இந்தியா - பெல்ஜியம் லக்செம்பர்க் பொருளாதார ஒன்றியத்தின் (India-Belgium Luxembourg Economic Union - BLEU) கூட்டுப் பொருளாதார ஆணையத்தின் (Joint Economic Commission - JEC) 16வது அமர்வு சமீபத்தில் நடத்தப்பட்டது.
BLEU ஆனது 1997 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
ஐரோப்பிய ஒன்றியமானது இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளர் அமைப்பாகும்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 28 உறுப்பு நாடுகளில், பெல்ஜியம் இந்தியாவுடன் மூன்றாவது மிகப்பெரிய வர்த்தகத்தைக் கொண்டுள்ளது.
2018 ஆம் ஆண்டில் இந்த நாடு இந்தியாவுடன் வைரங்கள், மருந்துகள், ரசாயனங்கள், உணவுப் பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய 12.8 பில்லியன் யூரோமதிப்புள்ள வர்த்தகத்தைக் கொண்டிருந்தது.
ஆதார் போன்ற ஒரு மின்னணு அடையாள அட்டையைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்த உலகின் முதலாவது நாடு பெல்ஜியம் ஆகும்.